தேனி மாவட்டத்தில் உடன் பணியாற்றும் பெண் ஊழியருக்கு கடன் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விஏஓவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் ரத்தினம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். விஏஓ வாக பணியாற்றி வரும் ஜெயக்குமாருடன் அலுவலகத்தில் தட்டச்சராக 24 வயது பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். பணியின் போது இளம் பெண் தனது குடும்ப பொருாளாதார நிலை குறித்து ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமாரும் தாம் உதவி செய்வதாகக் கூறி ரூ.2 லட்சம் கடனாகக் கொடுத்துள்ளார்.
மேலும் கடன் கொடுத்ததை பயன்படுத்தி ஜெயக்குமார் தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்து மீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வபோது இளம் பெண்ணும், ஜெயக்குமாரும் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், செல்போனில் வைக்கப்பட்டிருந்த அந்தரங்க புகைப்படங்கள் தவறுதலாக இளம் பெண்ணின் உறவினரான நாராயணராஜா என்பவருக்குக் கிடைத்துள்ளர். இதனை பயன்படுத்தி நாராயண ராஜா, ஜெயக்குமாரை மிரட்டி ரூ.3 லட்சம் வரை பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கோடை சிறப்பு விரைவு ரயில்கள் - தெற்கு ரயில்வே
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விஏஓ ஜெயக்குமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மிரட்டல் விடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட நாராயண ராஜா, வினோத், மாணிக்கம், பாபு ஆகியோர் மீது காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.