தேனி மாவட்டம் சோலை தேவன் பட்டியில் காலை நேரத்தில் மது போதையில் முழு நிர்வாணமாக ஊரில் வலம் வந்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் குப்பி நாயகன் பட்டியை அடுத்த தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). டிராக்டர் ஒன்றை சொந்தமாக வைத்துக் கொண்டு சுற்றுவட்டாரங்களில் வரக்கூடிய விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுவுக்கு அடிமையான சங்கர் நேற்று காலை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக தெருக்களில் வலம் வந்துள்ளார். இதனை பார்த்தி அப்பகுதி பெண்கள் சிலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி ஆண்கள், சங்கரை பிடித்து வைத்துக் கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
மதுரையில் சிறுமிக்கு தாலி கட்ட நினைத்த தாத்தா, குடும்பம் நடத்திய சித்தப்பா, ரூட்டு போட்ட தாய் கைது
புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடனடியாக சங்கரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறைக்கு தொடர்ந்து போக்கு காட்டும் புலி; ஆட்டை கடித்து மீண்டும் அச்சுறுத்தல்
மது போதையால் இளைஞர்கள் பலரும் தன்நிலை மறந்து இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதால் பிரச்சினைகளுக்கு தீர்வாக பூரண மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.