ஒரே குடும்பத்தில் 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி; 2 குழந்தைகள் பலி, 3 பேர் கவலைக்கிடம்

By Velmurugan sFirst Published Feb 8, 2023, 11:06 AM IST
Highlights

தேனி மாவட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது. 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த பொட்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமராஜ், வீரமணி தம்பதி. இவர்களுக்கு 6 வயது, 3 வயது, 2 வயதில் என 3 குழந்தைகள் இருந்தனர். ராமராஜ் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பொட்டிபுரம் கிராமத்தில் மணைவி வீரமணி மற்றும் 3 குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் ராமராஜ்க்கு அதிக கடன் சுமை இருந்ததாகவும் தனது 3 குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் காதுகுத்து விழா நடத்தி அதில் வரும் மொய் பணத்தைக் கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்று எண்ணியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இருவரும் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குலதெய்வ கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் வீட்டில் விழா நடத்துவது குறித்து கணவன் மனைவி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கோபித்துக் கொண்ட வீரமணி தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை; அதிகாரிகளை அலறவிட்ட விவசாயி

அவர்களை பின் தொடர்ந்து ராமராஜீம் சென்றார். ஆனால், அவர் தடுத்து நிறுத்தும் முன்பாக வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த பாலடைந்த கிணற்றில் வீரமணி தனது 3 குழந்தைகளையும் தள்ளிவிட்டு பின்னர் தானும் அதே கிணற்றில் குதித்துள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த ராமராஜ் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத அரசு பள்ளி ஆசிரியர்

அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

click me!