தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் தேனி மாவட்டம் கம்பம் வழியாக கம்பம்மெட்டு மலைச்சாலையில் சபரிமலை செல்கின்றனர். சபரிமலை சென்றவர்கள் குமுளி மலைப்பாதை வழியாக தமிழகத்திற்கு திரும்பி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் தேனி மாவட்டம் கம்பம் வழியாக கம்பம்மெட்டு மலைச்சாலையில் சபரிமலை செல்கின்றனர். சபரிமலை சென்றவர்கள் குமுளி மலைப்பாதை வழியாக தமிழகத்திற்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை சென்று திரும்பிய தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குமுளி மலைச்சாலையில் பாலத்தை கடக்க முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க;- கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கர விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 6 பேர் படுகாயம்.!
இந்த விபத்தை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புபணியில் விரைந்து ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் என்பதையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஒரு வழியாக கயிறுகட்டி வாகனத்தின் அருகே சென்றனர். அப்போது சிறுவன் ஒருவன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வானத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் பலத்த காயமடைந்த இருவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுது சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது. விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்.. திடீரென ரயில் முன் பாய்ந்த பெண் வழக்கறிஞர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்..!
விபத்தில் இறந்தவர்கள் விவரம்;-
சக்கம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி, தேவதாஸ், ஆண்டிபட்டியைச் சேர்ந்த நாகராஜ், சிவக்குமார், மறவபட்டி சேர்ந்த கன்னிச்சாமி, எஸ்.எஸ். புரத்தை சேர்ந்த வினோத், பிச்சை பட்டியலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கார் ஓட்டுநர், பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் உள்ளிட்ட 8 பேரின் உறவினர்கள் அடையாளம் காண்பித்து காவல்துறையினர் உறுதி செய்தனர்.