முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார். பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). அவருக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று தாயாரை பார்த்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தாயின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் விரைந்துள்ளார்.
பெரியகுளத்தில் இறுதி சடங்கு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்