மதுரையில் இருந்து தேனி வரை தற்போது ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் தேனியில் இருந்து போடி வரை விரைவில் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்திற்காக மதுரையில் இருந்து மூன்று பெட்டிகளுடன் போடிக்கு வந்த ரயில் நேற்று மாலை 4.30 மதுரையிலிருந்து போடி நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது.
தேனியில் ரயில் சோதனை ஓட்டத்தின் போது 2 மணிநேரத்தில் 2 பேர் அடுத்தடுத்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து தேனி வரை தற்போது ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் தேனியில் இருந்து போடி வரை விரைவில் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்திற்காக மதுரையில் இருந்து மூன்று பெட்டிகளுடன் போடிக்கு வந்த ரயில் நேற்று மாலை 4.30 மதுரையிலிருந்து போடி நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது.
undefined
இதையும் படிங்க;- லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு.. ஸ்கூல் டீச்சர் செய்ற வேலையா இது.. கதறும் கணவர்..!
அப்போது தேனி பங்களா மேடு பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது அவசரமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண்டிபட்டியை அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்த லட்சுமி (45) என்ற பெண் மீது ரயில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- என் பொண்டாட்டி, குழந்தையே போயிடுச்சு.. இந்த உலகத்துல எனக்கு என்ன வேலை! வேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!
அதேபோல், தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (19). இவர் இன்று மாலை தேனி மதுரை சாலையிலுள்ள தனியார் பள்ளி எதிரே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குச் சென்ற சோதனை ரயில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சோதனை ஓட்டத்திற்காக மதுரையில் இருந்து வந்த ரயில் போடி நோக்கி சென்ற போது ஒரு பெண் அடிபட்டு உயிரிழந்த நிலையில், போடியிலிருந்து திரும்பி மதுரை நோக்கி சென்ற போது கல்லூரியில் படிக்கும் இளைஞர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.