மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன்; மீட்கச்சென்ற மனைவி, உறவினருக்கு நேர்ந்த சோகம் - தேனியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Sep 4, 2023, 10:07 AM IST

தேனி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு, ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். அருகே உள்ள தோட்டத்தில் மாட்டு கொட்டை அமைத்து 20 மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கால்நடைகளுக்கு தீவனங்கள் போட்டு பராமரிப்பு செய்வதற்காக சென்று உள்ளார். 

ஆனால், மாடுகளை பராமரிக்கச் சென்ற கணவர் இரவு 9 மணி ஆகியும் வராத நிலையில் மனைவி ஹேமாவதி அவரது உறவினரான செந்தில்குமார் என்பவரிடம் தெரிவித்த நிலையில் இருவரும் மாட்டு கொட்டகையில் பார்க்க சென்றுள்ளனர். ஹேமாவதி மாட்டு கொட்டகையிலும், செந்தில் குமார் தோட்டத்திலும் சென்று அரவிந்தை தேடியுள்ளனர். அப்பொழுது மாட்டுக் கொட்டகை அருகே கீழே விழுந்து கிடந்த அரவிந்தை மனைவி ஹேமாவதி தூக்க முயன்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

அரசு பேருந்துக்குள் மழை! 15 மணி நேரம் நனைந்தபடியே பயணம் செய்த பயணிகள் வைரலாகும் வீடியோ

வேலியில் ஏற்பட்ட மின்கசிவால் அரவிந்த் உயிரிழந்த நிலையில், இதனை அறியாமல் அவரை தூக்கச் சென்ற ஹேமாவதியும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறியாமல் தோட்டத்தில் தேடிக்கொண்டிருந்த செந்தில் குமார் மாட்டு கொட்டகை அருகே வந்து பார்த்த பொழுது அரவிந்தும், ஹேமாவதியும் கீழே விழுந்து கிடந்தனர். அவர்களை மீட்க முயன்ற செந்தில் குமாரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனால் படுகாயமடைந்த செந்தில் குமார் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சிலர் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்திருப்பதை அறிந்து உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கும், மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மன்னிப்பு கேள்.. போலீசில் புகார்.. 10 ஆண்டு பிளாஷ்பேக்.. சனாதனம் பற்றி உதயநிதி பேச்சுக்கு தலைவர்கள் ரியாக்சன்

மேலும் படுகாயமடைந்த செந்தில் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!