தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகள் பூ வைக்க, பொட்டு வைக்க தலைமை ஆசிரியை தடை விதித்ததாக சொல்லப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியை இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்தகோவில் சாலையில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் ஜெயசீலி கடந்த சில நாட்களாக பொட்டு வைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது, தோடு அணியக்கூடாது என தினமும் காலை நடைபெறும் பிரேயரில் உத்தரவிட்டதாக மாணவிகள் தங்களது பெற்றோர்கள்களிடம் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலறிந்த இந்து முன்னணியினர் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் சவரியம்மாள்தேவி தலைமையிலான காவல் துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Aditya l1 launch: ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக இஸ்ரோவை கலக்கும் தென்காசி பெண் விஞ்ஞானி
மேலும் தலைமை ஆசிரியர் ஜெயசீலியை அழைத்து இந்து முன்னணியினர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இதுபோன்ற குற்றசாட்டு இனிமேல் வராது என்று அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலி உறுதி கூறியதன் அடிப்படையில் இந்து முண்ணனியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இப்போராட்டத்தால் சிறிதுநேரம் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காயமடைந்த காட்டு யானையை காப்பாற்றச் சென்ற மருத்துவர் யானை மிதித்து சாவு