தேனியில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவர், சிறுமி என இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் கார்த்திகேயன், கார்த்திகா தேவி. இவர்களது இரு பிள்ளைகளான சங்கிலி வேல் (வயது 12) 7ம் வகுப்பும், மேகா ஸ்ரீ (7) என்ற சிறுமி 4ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் மதுரையில் இருந்து வந்த கார்த்திகா தேவியின் சகோதரி மகனான சண்முகவேல் (21) என்ற இளைஞர், சிறுவர்கள் இருவரையும் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை மும்முனை சந்திப்பு பகுதியில் உள்ள பெரியகுளம் சாலையில் செல்லும் போது பின்னால் வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி மேகா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதக்கலவரத்தை தூண்டுவதற்காகவே அண்ணாமலை நடைபயணம்; அமைச்சர் பொன்முடி தடாலடி
சிறுவன் சங்கிலி வேல் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சண்முகவேல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த தேனி நகர் காவல் துறையினர், கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு பகுதியில் இருந்து வந்த லாரி ஓட்டுநர் ராமர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகளை தனியாக அழைத்து சில்மிஷம் செய்த ஆசிரியர்; பள்ளி முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு