அரசுப் பேருந்தில் பிளாக்கில் டிக்கெட் விற்ற போலி நடத்துநர்; அதிர்ச்சியில் உறைந்த அரசு நடத்துநர்

By Velmurugan s  |  First Published Aug 9, 2023, 11:33 AM IST

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணிகளிடம் போலியான பயணச்சீட்டுகளை விற்பனை செய்த போலி நடத்துநரை காவல் துறையினர் கைது செய்தனர்.


தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகளில் ஒருவர் அரசு பேருந்து நடத்துநரின் உடை அணிந்து நடத்துநர்கள்  வைத்திருக்கும் பேக்குடன் அதில் வைத்திருந்த பயணச் சீட்டுகளை பேருந்தில் இருந்த பயணிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தன்னிடம் இருந்த பயணச் சீட்டுகளை விநியோகம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்தின் நடத்துநர் தனக்கு பதிலாக வேறொரு நபர் பேருந்தில் பணியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் நடத்துநர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து அவரை பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பணியில் இருந்த மேலாளரிடம் முறையிட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

செவிலியர்களின் போராட்டத்தால் பூட்டப்பட்ட அரசு மருத்துவமனை; நோயாளிகள் கடும் அவதி

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழக மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்பதும், போலியாக நடத்துநர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

கிராமங்களில் கல்வியின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மேலும் அவர் வைத்திருந்த நடத்துநர் பேட்ஜ், கைப்பை, பயணச்சீட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் வேடியப்பனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வேடியப்பன் தொடர்ந்து இதுபோன்று வேறு பகுதிகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!