தேனியில் ரூ.3 லட்சம் நிதி திரட்டி குளத்தை தூர்வாரும் பள்ளி மாணவர்களின் செயலால் மக்கள் நெகிழ்ச்சி

By Velmurugan s  |  First Published Aug 4, 2023, 10:28 AM IST

தேனியில் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மூன்று லட்ச ரூபாய் நிதி திரட்டி குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேனியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தங்கள் பள்ளியில் ஆரம்பக் கல்வி முதலே நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும், விவசாயம் குறித்தும் கற்றுத்தரப்படுகிறது. இந்நிலையில் தனியார் பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் பொதுமக்கள், தங்கள் நண்பர்களிடம் குளத்தை தூர் வாருவதற்காக நிதி உதவியை திரட்டினர்.

7 ஏக்கர் கொண்ட கண்மாய் செடி, கொடிகளால் மண்டி கிடக்கும் குப்பாயூரணி குளத்தை தூர் வாருவதற்கு சுமார் 2.75 லட்சம் நிதி தேவைப்படும் சூழலில் கடந்த சில நாட்களாக தங்கள் பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் நிதி திரட்டிய பள்ளி மாணவர்கள் 3 லட்சத்திற்கும் மேலாக நிதியை திரட்டி கண்மாயை தூர் வாரும் பணியில் தற்போது ஈடுபட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் வாழ்க்கைக்காக போராடும் யானை

இன்று  பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றிணைந்து  பூஜைகள் செய்து புதர் மண்டி கிடக்கும் குளத்தில் செடி, கொடிகளை அகற்றி தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். குளம் தூர்வாரப்பட்டு கண்மாயில் மழை பெய்து சுற்றி இருக்கின்ற கிராம மக்களுக்கு குளம் மூலம் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

நத்தம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

click me!