தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களை முறையாக பதிக்கவில்லை என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோத்தலூத்து ஊராட்சியில் மேற்குத் தெருவில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. புதிய இணைப்புகள் அமைக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் அரை அடி ஆழத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் கலவையால் மூடப்பட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இரண்டு இன்ச் ஆழத்திற்கு மட்டுமே குழாய்கள் மூடப்பட்டதாகவும், அதிலும் குறிப்பாக தரம் இல்லாத சிமெண்ட் கலவையால் மூடப்பட்டதால் தெருவில் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும்போதும், மழைபெய்யும் போதும் சிமெண்ட் கலவை பெயர்ந்து குடிநீர் குழாய்கள் சேதம் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று புகார் தெரிவிக்கின்றனர்.
தனியார் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை; காவல்துறை தீவிர விசாரணை
இந்நிலையில் தரமில்லாமல் அமைக்கப்பட்ட பணிகளை பாதியிலேயே தடுத்து நிறுத்தி ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களை திருப்பி அனுப்பிய கிராமமக்கள், தரமில்லாமல் போடப்பட்ட சிமெண்ட் கலவையை தோண்டி மீண்டும் தரமான முறையில் சிமிண்ட் கலவையை போட்டு மூடி பணிகளை முடிக்கவேண்டும் என்றும் அதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் வாக்கைக்காக போராடும் யானை