தேனி உத்தமபாளையத்தில் கூலித் தொழிலாளி வீட்டில் ரூ.15 லட்சம் திருட்டு - காவல் துறையினர் விசாரணை

By Velmurugan s  |  First Published Jul 27, 2023, 5:51 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி எஸ்.டி.கே. நகரைச் சேர்ந்தவர் ஜெயகண்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், அவர்களது மகன் திருமணமாகி வெளியூரில் தனியாக வசித்து வருகிறார். மகள் வெளியூரில் படித்து வருகிறார். ஜெயகண்ணன் அப்பகுதியில் திராட்சை தோட்டத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார். மனைவி கார்த்திகா கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்ட வேலைக்கு ஜீப் மூலம் தினமும் சென்று வருகிறார். 

இந்தநிலையில்  வழக்கம்போல் ஜெயகண்ணனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். முன்னதாக வீட்டின் சாவியை ஜன்னல் அருகே வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. வேலை முடிந்து மாலையில் கணவன், மனைவி 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

Tap to resize

Latest Videos

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து கண்டனம்

இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஜெயகண்ணன், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வலிப்பு வந்து சாலையில் உயிருக்கு போராடிய இளைஞர், ஓடி வந்து உதவிய காவலர்கள்; பொதுமக்கள் நெகிழ்ச்சி

தேனியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த மோப்பநாய் திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் இருந்து க.புதுப்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, அங்குள்ள பேருந்து நிறுத்தம் வரை ஓடியது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!