7 பெண்களை ஏமாற்றி திருமணம்; கணவரை கைது செய்யக்கோரி இளம் பெண் தீக்குளிக்க முயற்சி

By Velmurugan s  |  First Published Jul 27, 2023, 8:43 AM IST

ஏழுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட தனது கணவரை கைது செய்ய வலியுறுத்தி இளம் பெண் ஒருவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 36). தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இவர் திடீரென தனது உடலில் பெற்றோரை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அப்பெண்ணை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

இதன் பின்னர் அப்பெண்ணிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், எனது சொந்த ஊர் உத்தமபாளையம் அடுத்த சுக்காங்கல்பட்டி. நான் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டார்லின் என்பவரை திருமணம் செய்துகொண்டேன். ஆனால் எனது கணவர் திருமணத்தின் போது எண்ணிடம் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகையை பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் தர மறுக்கிறார்.

Latest Videos

undefined

வேல் யாத்திரை போன்று அண்ணாமலையின் பாத யாத்திரையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - அமைச்சர் எ.வ.வேலு

எனது கணவரிடம் இருந்து பணம், நகையை மீட்டுத் தாருங்கள். என்னைப் போன்றே எனது கணவர் சுமார் 7க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணம், நகை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு அவர்களையும் ஏமாற்றி உள்ளார். எனவே எனது கணவரை கைது செய்து பணம், நகையை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த காவல் துறையினர் அப்பெண்ணை முதலுதவி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

click me!