தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே யானை மிதித்து தோட்ட தொழிலாளி பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பண்ணை புரத்தைச் சேர்ந்த செல்லம் மேஸ்திரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நாள்தோறும் இரவு நேரங்களிலும் தோட்ட காவல் பணிகளில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணிக்குச் சென்ற முருகன் அந்தத் தொட்டப் பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானையால் எதிர்பாராத விதமாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதிகாலை தோட்டப்பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் தோட்டத் தொழிலாளி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோம்பை காவல் நிலையம் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்; இளம் பெண் தற்கொலை - பெற்றோர் கோரிக்கை
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தோட்ட தொழிலாளி முருகன் உயிரிழந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
திண்டுக்கல்லில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது
மேலும் அடிக்கடி விளைநிலங்களுக்கு உலா வரும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்வதற்கு வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.