தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாய் தடுக்கி கீழே விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே கீழமஞ்சி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தயாஷிரி. கணேசன் வழக்கம் போல் கிராமத்தில் கூலி வேலைக்கு சென்று விட்டார். இவரது தாய் ஆண்டிபட்டியில் உள்ள மளிகை கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் உள்ள குழந்தையின் பாட்டியும், கணேசனின் தாயாருமான மூதாட்டி பூ விற்பதற்காக வெளியில் சென்றுவிட்டார்.
இந்நிலையில் வீட்டிற்கு வெளியே வடக்குத் தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை தயாஸ்ரீ ஓடி விளையாடியபோது தெருவோரத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் வழங்கும் இரும்பு குழாயை தாண்ட முயன்றபோது தடுக்கி கீழே விழுந்துள்ளது.
பேருந்தில் உள்ளே வரச்சொன்ன நடத்துநரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய அரசுப்பள்ளி மாணவர்
இதில் குழந்தையின் தலை கம்பியில் அடிபட்டுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தை உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து இராஜதானி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலைஞரின் எழுத்துகளை படித்தால் மட்டும் தான் எதிர்கால தமிழ் சமுதாயம் முன்னேறும் - ஆ.ராசா பேச்சு
இப்பகுதியில் மூன்று வயது குழந்தை கம்பியில் அடிபட்டு இறந்த சம்பவம் இக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.