தேனி மாவட்டம் சுருளிஅருவிக்கு செல்லும் சாலையில் யானை கூட்டம் தொடர்ந்து முகாம் இட்டு உள்ளதால் 3வது நாளாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலை வனப்பகுதியில் யானைகள் தொடர்ந்து இன்று வரை முகாமிட்டு உள்ளன. அந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அருவியில் சுற்றுலா பயணிகள் சென்று குளிப்பதற்கு 3வது நாளாக இன்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
13 வருடங்களாக பார்க்க வராத தந்தை; ஏக்கத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு - குடும்பத்தினர் சோகம்
யானைகள் அப்பகுதியை விட்டு கடந்த பின்பு தான் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சுருளி அருவியில் நீர் வரத்து இருந்தும் அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.