பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபோது, முதல் ஆளாக வரவேற்றன். பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் என்கிற நல்தொரு திட்டம். அதை தி.மு.க. அமைச்சர் கொச்சையாகப் பேசி இருக்கக் கூடாது. அரசு எந்த விஷயத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை.
பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் என்கிற நல்தொரு திட்டம். அதை திமுக அமைச்சர் பொன்முடி கொச்சையாகப் பேசி இருக்கக் கூடாது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்த நடிகை கஸ்தூரி நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மேயர் சண்.ராமநாதன் மற்றும் ஆணையர் க.சரவணக்குமார் ஆகியோர் சந்தித்தார். அப்போது கஸ்தூரிக்கு இருவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை கஸ்தூரி;- தஞ்சாவூர் மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை அறிந்து மேயரையும், ஆணையரையும் சந்திக்க வந்தேன். இரு இளைஞர்களின் செயல்பாடு பாராட்ட தக்க வகையில் உள்ளது. தஞ்சாவூரில் மக்களுக்காக வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது போன்றவையும், இறந்தவர்களின் உடல்கள் இலவசமாக அடக்கம் செய்வது வேறு எங்கும் இல்லாத வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்திலேயே முன்மாதிரி மாநகராட்சியாக உள்ளது பாரட்டதக்கது. தமிழகத்தில் திராவிட மாடல் என்றாலும், தஞ்சாவூரில் ராமநாதனின் மாடல் வெகு சிறப்பாக உள்ளது.
இதையும் படிங்க;- அதிகாரம் இருக்குது என்பதால் மமதையில் ஆட்சியாளர்கள் ஒவரா ஆடாதீங்க.. திமுகவை எச்சரிக்கும் பாஜக..!
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபோது, முதல் ஆளாக வரவேற்றன். பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் என்கிற நல்தொரு திட்டம். அதை தி.மு.க. அமைச்சர் கொச்சையாகப் பேசி இருக்கக் கூடாது. அரசு எந்த விஷயத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் எல்லா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அப்படி இருக்கும் போது மக்களுக்கு ஒரு திட்டத்தைச் செய்து விட்டு, அதை மக்கள் வாங்கிக் கொள்ளுகிறார்கள் என சுட்டிக்காட்டுவது மிக பெரிய தவறு. ஓசி பஸ் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது மிக பெரிய தவறு.
பொன்முடி எப்போதும் உடைத்துப் பேசக்கூடிய நபர். அப்படிப் பேசியதை நியாயப்படுத்த முடியாது. ஓசி பயணம் என சொல்லாமல் இலவசம் என கூறி இருக்கலாம். ஓசி பஸ் என பெண்களை கூறும் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும் பெண் வயிற்றில் ஓசியில் இருந்து பிறந்தவர்கள் தான். அதற்காக பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும்.
மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்திருப்பதன் மூலம், அந்த அமைப்பை திமுகதான் மக்கள் மத்தியில் வளர்த்து வருகிறது. ஒரு செயலை முடக்கி வைக்க முற்படும் போது தான் அது வேகமாக வளரும். அதுபோல ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பை மக்களுக்கு தெரியுமா தெரியாதா என்ற நிலையில் அதன் ஊர்வலத்துக்கு தடை விதித்திருப்பதன் மூலம் அது வளர்வதற்கு திமுக மறைமுகமாக உதவி செய்கிறது. வெளிப்படையாக சொன்னால் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்து வளர திமுக என்ற மூன்றெழுத்து உதவுகிறது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- கவுரி லங்கேஷை கொலை செய்த இயக்கம் மீது தடை எங்கே..? முதலில் NIA-வை தடை செய்யுங்க.. கொதிக்கும் ஜாவாஹிருல்லா.