காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் எச்.ராஜா முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் எச்.ராஜா அவதூறாக பேசினார் என்று திமுகவினர் சார்பில் காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது நான்கு பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எச்.ராஜாவின் பேச்சு இரு மதத்தினர் இடையே மோதலைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாகும் வழக்குப்பபதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இவ்வாறு பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை