திமுகவே சனாதனத்தில் ஊறிப்போன கட்சி: சீமான் சீற்றம்

By SG Balan  |  First Published Sep 10, 2023, 7:29 PM IST

மகன் சனாதனத்தை எதிர்க்கிறார்... அப்பா அதற்காக மோடியிடம் சென்று சமாதானம் பேசுகிறார்... என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.


தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிப் பேசியது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக மீது புதிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சிவகங்கையில் தனது கட்சியின் நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமான் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சீமான் சனாதனம் தொடர்பான சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய சீமான், “சனாதன கோட்பாடு பல்லாயிரம் ஆண்டு காலமாக உள்ளது. மனித குலத்தில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாகுபாடு பார்ப்பது தான் சனாதனக் கொள்கை. உண்மையிலே பகவத் கீதையில் அப்படி சொல்லி இருக்கிறதா? பிரம்மன் தலையிலிருந்து பிராமணனனைப் படைத்தேன், தோளிலிருந்து சத்ரியனையும், தொடையிலிருந்து வைசியனையும் படைத்தேன், காலில் இருந்து சூத்திரனைப் படைத்தேன் என்று சொல்லப்பட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியா! 5 முக்கிய விளைவுகள் என்னென்ன?

"ஒரு மனிதன் பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சமத்துவ சகோதரத்துவ சமூகத்தை உருவாக்க திமுக, அதிமுகவினர் என்ன முன்முயற்சி எடுத்தார்கள்? திமுகவே சனாதனத்தில் ஊறிப்போன கட்சி." என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மகன் சனாதனத்தை எதிர்க்கிறார்... அப்பா அதற்காக மோடியிடம் சென்று சமாதானம் பேசுகிறார்... இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கூட ஜி20 மாநாட்டுக்குச் செல்லாதபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் போனது ஏன்?" என்று சந்தேகத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறார்.

"சனாதனம் என்பது தமிழ் வார்த்தையே இல்லை. அது சமஸ்கிருதம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு உள்ள கோட்பாட்டை எதிர்க்கிறேன் என்று சொல்லுங்கள். இது ஒரு மனநோய். வைரஸ் என்றெல்லாம் அதைத்தான் உதயநிதி சொல்லி இருக்கிறார்" என்று தன் பங்கிற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்.

"சனாதானத்தை ஏற்கும் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு கூட்டணி எதற்கு? பாஜக ஆண்டாலும், காங்கிரஸ் ஆண்டாலும் காவிரியில் தண்ணீர் தரவில்லை. நம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் அவர்களோடு  கூட்டணி  எதற்கு? காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, பாஜக ஆட்சியிலும் சரி, ஜனநாயகம் எங்கு இருக்கிறது” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் பிரபல ரவுடி பூச்சி சுதாகர் வெட்டிக் கொலை: முன்விரோதத்துக்கு பழிதீர்த்த எதிரிகள்!

click me!