காரைக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநரை கல்லூரி மாணவிகள் தங்களது அண்ணன்கள் உதவியுடன் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் எம்.கே.ஜி., என்ற தனியார் பேருந்தின் நடத்துநராக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கண்டிச்சான்காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 37) உள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் காரைக்குடி வாட்டர் டேங்க் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளனர்.
undefined
நடத்துநர் பாலமுருகன் 5.05 மணிக்குத்தான் பேருந்து புறப்படும். அதற்கு முன்பு வேறு பேருந்து உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவிகள் பரவாயில்லை நாங்கள் மெதுவாக செல்கிறோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் நடத்துநர் அந்த மாணவிகளை பேருந்தை விட்டு இறங்குமாறு திட்டியுள்ளார்.
செல்போனில் பேசுவதை கண்டித்த தாய்? 10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
பேருந்தில் இருந்து இறங்கிய மாணவிகள் அவரது அண்ணன் சந்தோஷ்குமாருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் விரைந்து வந்த சந்தோஷ்குமார், அவரது நண்பர்கள் வசீகரன், ரஞ்சித் மற்றும் முரளி ஆகியோர் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பேருந்து நடத்துநர் பாலமுருகனை சரமாரியாக தாக்கினர்.
சொகுசு கேரவனில் நீதிமன்றத்திற்கு வந்த ராக்கெட் ராஜா; சட்டமன்ற தேர்தலில் போட்டி என அறிவிப்பு
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சமாதானம் செய்ய முயன்ற ஓட்டுநரையும் இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.