இதுதான் பகுத்தறிவா? மழையை நிறுத்த தேங்காய் வழிபாடு நடத்திய திமுகவினரை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சியினர்!

By SG BalanFirst Published Jun 15, 2023, 10:34 AM IST
Highlights

சிங்கம்புணரியில் திமுகவினர் தங்கள் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி பாதிக்கும் என்பதற்காக மழையை நிறுத்த வழிபாடு நடத்தியது கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் வழிவகுத்துவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்போது மழை பெய்து இடையூறு செய்ததால் மழையை நிறுத்த தேங்காய் வழிபாடு நடத்தப்பட்டது. பகுத்தறிவு கொள்கையைப் பேசும் கட்சி இத்தகைய வழிபாடு நடந்தியதை எதிர்க்கட்சியினர் கிண்டலாகப் பேசுகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திமுகவினர் சார்பில் பெண்கள் கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 2வது நாளில் மழை பெய்து போட்டி தடைபட்டது. அதற்கு மறுநாளும் மழை தொடர்ந்ததால் போட்டியைக் கைவிடும் நிலைமை வந்துவிட்டது.

கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இதனால், திமுகவினர் மழையை நிறுத்தி வைக்க பாரம்பரிய முறையில் தேங்காய் வழிபாடு நடத்தி, நிகழ்ச்சி இடத்தில் உள்ள கூரையின் மீது தேங்காயை தூக்கி வீசினர்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது மழை குறுக்கிடும் சூழல் ஏற்பட்டால் மழையைத் தடுக்க ஒரு தேங்காயை வைத்து வருண பகவானிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, நிகழ்ச்சி நடக்கும் கூரையின் மேல் போட்டுவிடுவார்கள். இப்படிச் செய்தால் நிகழ்ச்சி முடியும் வரை மழை பெய்யாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.

10 லட்சம் வாக்குச்சாவடிகளின் பாஜக ஊழியர்கள் முன் பிரதமர் மோடி உரை

பகுத்தறிவு கொள்கையைப் பேசிக்கொண்டிருக்கும் திமுகவினரே, மழையால் கட்சி நிகழ்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க இந்தத் தேங்காய் வழிபாட்டை நடத்தி இருப்பது நகைப்புக்கு உரியதாக மாறிவிட்டது. ஆனால், பகுத்தறிவு பேசும் திமுகவினர் செய்த தேங்காய் வழிபாட்டுக்கும் பலன் கிடைத்தது. அதற்குப் பிறகு மழை பெய்து இடையூறு ஏற்படாமல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

வெய்யில் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மழையை வேண்டி காத்திருக்கும் நிலையில், திமுகவினர் தங்கள் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி பாதிக்கும் என்பதற்காக மழையை நிறுத்த வழிபாடு நடத்தியது அப்பகுதி விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

ரஷ்யா - உக்ரைன் போருடன் ஒப்பிட்டு மம்தா அரசை விமர்சித்த பாஜக தலைவர் அக்னிமித்ரா

click me!