சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து பார்வையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 10 கட்டிடங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் 6 கட்டிடங்களில் இரண்டு தளங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. நெசவு, விவசாயம், அலங்கார பொருட்கள். வணிகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலான பொருட்களுக்கு தனிதனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டிட தொகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்ப வீடியோ காட்சிகள், அனிமேஷன் காட்சிகள் மெகா சைஸ் டிவிக்களில் ஒளிபரப்பப்படுகின்றன. ஒவ்வொரு தளத்திலும் மினியேச்சர் சிற்பங்கள். புடைப்பு சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது.
சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தால் 2 லாரிகள் மோதி விபத்து; சிறுவன் பலி
அதன்படி இன்று காலை 10 மணிக்கு பொதுமக்கள் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க வந்திருந்தனர். ஆனால் 10.20 மணி வரை அருங்காட்சியக கதவுகள் திறக்கப்படாமல் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் வெயிலில் காத்திருந்தனர். அப்போது நடிகர்கள் உள்ளே பார்த்து வருகின்றனர். அதனால் நீங்கள் காத்திருக்க வேண்டும் என காவல் துறையினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறை கைதிகளுக்கு செல்போனை வாடகைக்கு விட்டு கல்லா கட்டும் காவல் அதிகாரிகள்