பாம்பு கடிக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

By Velmurugan s  |  First Published Dec 31, 2022, 11:59 AM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 வயது சிறுமி மருத்துவர்கள் இல்லாததால் செவிலிர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அடுத்த சேர்வாவூரணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம், அமுதா தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் ஓவியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வீட்டு வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். 

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் சிக்கல்? ஜன.31ல் கருத்துக் கேட்பு கூட்டம்

Tap to resize

Latest Videos

அப்போது திடீரென சிறுமி ஓவியா காலில் ஏதோ கடித்து விட்டதாகக் கூறி அலறியுள்ளார். அதன்படி செல்வம் அருகில் பார்த்த போது விஷபாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியை பாம்பு கடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நள்ளிரவு நேரம் என்பதால் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், அங்கிருந்த செவிலியர்கள் காயத்தை பார்த்துவிட்டு ஏதேனும் தண்ணீர் பாம்பு தான் கடித்திருக்கும் பயப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். ஆனால், சிறுமிக்கு தொடர்ந்து வாந்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறிமிக்கு விஷமுறிவுக்கான ஊசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் நிதித்துறையில் புதுமை செய்வோம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இருப்பினும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு வந்த உடன் விஷமுறிவுக்கான ஊசி போடப்பட்டிருந்தாலோ, முன்னதாகவே மருத்துவர் இல்லை, வேறு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறியிருந்தாலோ சிறுமியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

click me!