அரசு கலைக்கல்லூரி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்த மாணவிகளை கவர, டூவீலரில் வந்த இளைஞர்கள் சாகசம் செய்தனர்.
இதனை பின்னால் வந்த மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது டூவீலரின் பின்புறம் அமர்ந்திருந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் திடீரென எழுந்து சீட்டில் ஏறி நின்றார்.
காரைக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இரண்டு வார காலம் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிலையங்கள் உள்ளன. கடந்த மாதம் 30ம் தேதி அழகப்பாபுரம் காவல் நிலையம் எதிரே, அரசு கலைக்கல்லூரி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்த மாணவிகளை கவர, டூவீலரில் வந்த இளைஞர்கள் சாகசம் செய்தனர். இதனை பின்னால் வந்த மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது டூவீலரின் பின்புறம் அமர்ந்திருந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் திடீரென எழுந்து சீட்டில் ஏறி நின்றார்.
undefined
அப்போது நிலை தடுமாறி கல்லூரி மாணவிகள் கண்முன்பே தலைகுப்புற விழுந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் இவர்களை பின் தொடர்ந்து வீடியோ எடுத்தவர்கள் என மொத்தம் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைதுக்கு பயந்து 3 பேரும் முன்ஜாமீன் கோரி காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு வார காலம் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து, காரைக்குடி கல்லூரி சாலையில் நின்று சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் மாணவர் ஈடுபட்டார்.