கல்லூரி மாணவிகளை பைக் சாகசம் மூலம் திரும்பி பார்க்க வைப்பதற்காகவும் இளைஞர்கள், மாணவர்கள் விலை உயர்ந்த ரேஸ் பைக் மூலம் சாகசங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறை மற்றும் நீதிமன்றம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் இதுதொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
காரைக்குடி கல்லூரி சாலையில் மாணவிகளின் முன்பு வாகனத்தில் சாகசம் காட்டிய பாலிடெக்னிக் மாணவர் திடீர் என தலைகுப்புற விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி மாணவிகளை பைக் சாகசம் மூலம் திரும்பி பார்க்க வைப்பதற்காகவும் இளைஞர்கள், மாணவர்கள் விலை உயர்ந்த ரேஸ் பைக் மூலம் சாகசங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறை மற்றும் நீதிமன்றம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் இதுதொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிலையங்கள் உள்ளன. கடந்த 30ம் தேதி அழகப்பாபுரம் காவல் நிலையம் எதிரே, அரசு கலைக்கல்லூரி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்த மாணவிகளை கவர, டூவீலரில் வந்த இளைஞர்கள் சாகசம் செய்தனர்.
இதனை பின்னால் வந்த மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது டூவீலரின் பின்புறம் அமர்ந்திருந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் திடீரென எழுந்து சீட்டில் ஏறி நின்றார். அப்போது நிலை தடுமாறி கல்லூரி மாணவிகள் கண்முன்பே தலைகுப்புற விழுந்தார். இதுதொடர்பான வீடியோ மூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் இவர்களை பின் தொடர்ந்து வீடியோ எடுத்தவர்கள் என மொத்தம் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.