இந்த நாய்க்கு கோயில் கட்டவும் திட்டமிட்டு இருக்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மற்றும் நல்ல நாட்கள் அன்று சிலைக்கு மாலை அணிவித்து, உணவு பொருட்கள் வைத்து படையில் இட்டு வருகிறோம்.
உலகம் முழுக்க செல்லப்பிராணி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகம் உண்டு. செல்லப்பிராணிகள் நம்மிடம் அதிக பாசம் காட்டும், நமது கவலைகளை மறக்க செய்யும், மனிதர்களை விட செல்லப்பிராணிகள் நம்மிடம் உண்மையாக பழகும் என ஆயிரம் காரணங்களை கூற முடியும். எனினும், செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது ஏற்படும் ஒரே சிக்கல்- அவை நம்மை பிரியும் போது நமக்கு ஏற்படும் கவலை மட்டும் தான்.
நாய், பூனை, கிளி, புறா என பலரும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். உலகின் சில நாடுகளில் பலர் சிங்கம், முதலை உள்ளிட்டவைகளையும் செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். அந்த வகையில், தமிழ் நாட்டின் சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துவின் குடும்பத்தாரும் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் ஆவார்.
undefined
நாய் ப்ரியர்கள்:
முத்து மட்டும் இன்றி அவர்களின் தாத்தா, பாட்டி உள்ளிட்டோருக்கும் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 82 வயதான முத்து டாம் என்ற பெயரில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். டாம் தன் மீது அதீத அன்பு வைத்து இருந்ததாக முத்து தெரிவித்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக டாம் உயிரிழந்து விட்டது.
கோயில்:
"என் குழந்தைகளை விட நாய் மீது எனக்கு அதிக பாசம் உண்டு. நான் மட்டுமின்றி எனது தாத்தா மற்றும் பாட்டியும் நாய்கள் மீது அக்கறை செலுத்தி வந்தனர்," என முத்து தெரிவித்தார். டாம் மறைவை ஒட்டி மிகவும் கவலை கொண்டிருந்த முத்து, தனது செல்லப்பிராணியை மறக்க முடியாமல் அதன் நினைவாக சிலை ஒன்றை வைத்து இருக்கிறார்.
இந்த சிலை மார்பிள் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை உருவாக்க ரூ. 80 ஆயிரம் செலவானது என முத்துவின் மகன் மனோஜ் குமார் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த நாய்க்கு கோயில் கட்டவும் திட்டமிட்டு இருக்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மற்றும் நல்ல நாட்கள் அன்று சிலைக்கு மாலை அணிவித்து, உணவு பொருட்கள் வைத்து படையில் இட்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.