பிரபல ஹோட்டல் சட்னியில் இறந்து கிடந்த பல்லி.. தெனாவட்டாக பதில் சொன்ன ஓனர்! அதிரடி நடவடிக்கையில் உணவுத்துறை.!

By vinoth kumar  |  First Published Oct 14, 2022, 10:22 AM IST

தனியார் ஹோட்டலில் சாப்பாட்டில் பல்லி இறந்து கிடந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் வந்து சோதனை செய்து கடையை மூட உத்தரவிட்டனர்.


தனியார் ஹோட்டலில் சாப்பாட்டில் பல்லி இறந்து கிடந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் வந்து சோதனை செய்து கடையை மூட உத்தரவிட்டனர்.

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு, ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இதனால், தமிழக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஹோட்டல்களில் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியாக வலியுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறத. ஆனாலும், ஹோட்டலில் வாங்கும் உணவில் பல்லி, கரப்பான் பூச்சி, எலி தலை, புழு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி.. தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி..!

இந்நிலையில், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபலமான ஹோட்டலில் சட்னியில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான பட்டய பயிற்சி சிவகங்கையில் நடைபெற்று வருகிறது. இதற்கு வருகை தந்த கவுன்சிலர் ஒருவர் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடச் சென்றுள்ளார். 

அப்போது அவருக்குப் பரிமாறப்பட்ட சட்னியில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்ட போது அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து,  சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் வந்து சோதனை செய்து கடையை மூட உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- சமயபுரம் மாரியம்மன் கோவில் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

click me!