இந்தியாவில் மட்டும்தான் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுதோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்தும் நூதன முயற்சியில் இந்து அமைப்பினர் ஈடுபட்டனர்.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி அமைப்பினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
உலக முழுவதுதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வதை மரபாக கொண்டுள்ளனர். வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். காதலர் தினங்களில் காதலர்கள் பீட்ச், பூங்கா உள்ளிட்ட இடங்களில் காதலர் அத்துமீறியும் நடந்து கொள்கின்றனர்.
undefined
இதையும் படிங்க;- உண்மையிலே நாட்டை காதலிச்சு 40 CRPF வீரர்கள் இறந்த நாள் தான் பிப்ரவரி 14.. உருக்கமான வீடியோவை வெளியிட்ட நபர்.!
இந்நிலையில், காதலர் தினக் கொண்டாட்டம் என்பது மேலை நாட்டு கலாச்சாரம் என்பதால் இதை இந்தியாவில் இந்து அமைப்பு, விசுவ இந்து பரிசத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்த்து வருகின்றனர். காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், காதலர் தினத்தை தடை செய்ய கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் காதல் தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்தும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.
இதையும் படிங்க;- ஃபுல் மப்பில் மாப்பிள்ளை செய்த காரியம்... கடைசி நேரத்தில் பெண் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு
இந்தியாவில் மட்டும்தான் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுதோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்தும் நூதன முயற்சியில் இந்து அமைப்பினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி அமைப்பினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.