ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து முதியவர் படுகாயம்.. அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?

By Ramya s  |  First Published Jun 3, 2024, 10:27 AM IST

சிவகங்கையில் ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்த போது ஹெட்போன் வெடித்ததால் முதியவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


தொழில்நுட்பம் எந்தளவு நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதோ சில நேரங்களில் அதே அளவு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. ஆம்.. சிவகங்கையில் ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்த போது ஹெட்போன் வெடித்ததால் முதியவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே மாத்துகண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் ஒரு விவசாயி. 55 வயதாகும் இவர் நேற்று முன் தினம் இரவு ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டுள்ளார். அப்போது அவரின் ப்ளூடூத் ஹெட்போன் திடீரென வெடித்து சிதறியதால் அவரின் காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

அடிக்கடி குளிர்பானங்கள், காபி, டீ குடிப்பீங்களா? ICMR விடுத்த எச்சரிக்கையை கவனிச்சீங்களா?

புளூடூத் ஹெட்போன்கள் வெடிப்பது மிகவும் அரிதானது என்றாலும், லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கும் எந்த மின்னணு சாதனமும் சில சந்தர்ப்பங்களில் வெடிக்கும் சாத்திக்கூறுகள் உள்ளது. ஆனால் சாத்தியமான அபாயங்களைக் குறைக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமானது. ப்ளூடூத் ஹெட்போனை பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Expiry date Vs Best before date : இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது பாதுகாப்பானது? FSSAI விளக்கம்..

ப்ளூடூத் ஹெட்போனை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?

  • பிரபலமான நல்ல பிராண்டுகள், அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து ப்ளூடூத் ஹெட்போனை வாங்கவும். 
  • உங்கள் ப்ளூடூத் இயர்போன்களை மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருக்கும் தீவிர வெப்பநிலையில் வைக்க வேண்டாம். அதிக வெப்பநிலை பேட்டரி மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
  • உங்கள் ப்ளூடூத் ஹெட்போன் வாங்கும் அதற்காக கொடுக்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தவும். பொருந்தாத சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரியை சேதப்படுத்தும். இதனால் பேட்டரி அதிக வெப்பமடையும் அபாயத்தை அதிகரிக்கும்.
  • உங்கள் ப்ளூடூத் ஹெட்போன் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு உடனடியாக அதை சார்ஜில் இருந்து எடுக்க வேண்டும். அதிக சார்ஜ் செய்வது பேட்டரியை பாதிக்கலாம்.
  • உங்கள் ப்ளூடூத் ஹெட்போனில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா எனத் தவறாமல் சரிபார்க்கவும். ஏதேனும் சேதம் ஏற்பட்டால், உடனடியாக இயர்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
  • பயன்பாட்டில் இல்லாதபோது, ​​உங்கள் ப்ளூடூத் இயர்போன்களை நேரடி சூரிய ஒளி வைப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் ஹெட்போனை வைக்கவும்.
  • உங்கள் ப்ளூடூத் இயர்போன்களை சார்ஜ் செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் அந்த நிறுவனத்தின் வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும்.
  • பெரும்பாலான புளூடூத் இயர்போன்கள் வாட்டர் ப்ரூஃபாக வருவதில்லை. எனவே அவற்றை நீர் அல்லது ஈரப்பதமான இடத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். 
  • உங்கள் ப்ளூடூத் இயர்போன்களில் இருந்து அதிகப்படியான வெப்பம், புகை அல்லது விசித்திரமான வாசனை போன்ற ஏதேனும் அசாதாரணமான நடத்தையை நீங்கள் கண்டால், உடனடியாக அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உதவிக்கு உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ளவும்.
  • இந்தப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ப்ளூடூத் ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
click me!