- Home
- Gallery
- அடிக்கடி குளிர்பானங்கள், காபி, டீ குடிப்பீங்களா? ICMR விடுத்த எச்சரிக்கையை கவனிச்சீங்களா?
அடிக்கடி குளிர்பானங்கள், காபி, டீ குடிப்பீங்களா? ICMR விடுத்த எச்சரிக்கையை கவனிச்சீங்களா?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) குளிர்பானங்கள், பழச்சாறுகள், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றைத் தவிர்க்க புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது..

Image: Freepik
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் உடனடி ஆற்றலைப் பெற உதவும் உணவுகள் மற்றும் பானங்களை நாம் விரும்புகிறோம். எனவே நாம் அடிக்கடி குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் சர்க்கரை பானங்களை குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.. ஆனால் அது ஆரோக்கியமானதா? சமீபத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) குளிர்பானங்கள், பழச்சாறுகள், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றைத் தவிர்க்க புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது..
soft drinks
ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்வதை ICMR நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்க்கரை பானங்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, தண்ணீர் நுகர்வுக்கு முன்னுரிமை அளித்து, முழு உணவுகளைத் தேர்வுசெய்யுமாறு மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கரும்புச் சாறு
கரும்பு சாற்றில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் 100 மில்லிலிட்டருக்கு 13-15 கிராம் சர்க்கரை உள்ளது. கரும்பு சாறு, பொதுவாக இந்தியாவில், குறிப்பாக கோடையில், கரும்பு ஜுஸை பெரும்பாலான மக்கள் விரும்பி அருந்துகின்றனர். ஆனால் அதை குறைவாக குடிக்க வேண்டும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் 30 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக்கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், அதே சமயம் 7 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் சர்க்கரை நுகர்வு 24 கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
<p><strong> সফট ড্রিঙ্কস একদম নয়</strong></p><p>ফট ড্রিঙ্কস হোক কিংবা কোলা এই পানীয়গুলিতে প্রচুর চিনি রয়েছে। সুতরাং এই জাতীয় পানীয় থেকে দূরে থাকুন। কেবলমাত্র ব্যায়ামের আগেই নয়, যে কোনও সময়েই এগুলি শরীরের জন্য ক্ষতিকারক। এগুলি খেলে ওজন কম তো দূর বরং ওজন বাড়তে শুরু করে।<br /> </p>
செய்ற்கை குளிர்பானங்கள்
குளிர்பானங்கள், பல வீடுகளில் பிரதானமாக இருக்கின்றன. அனைத்து வயது மக்களுக்கு செய்ற்கை குளிர்பானங்களை அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அதிக சர்க்கரை இருப்பதாலும், எந்த ஊட்டச்சத்தும் இல்லாததாலும் செயற்கை குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த குளிர்பானங்களின் நுகர்வு உடல் பருமன், வகை 2 நீரிழிவு, பல் பிரச்சனைகள் மற்றும் இதய நோய்கள் உட்பட எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த செயற்கை குளிர்பானங்களை தவிர்க்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. அதற்கு பதில். மோர், எலுமிச்சை ஜூஸ், பழச்சாறு (சர்க்கரை சேர்க்காமல்), மற்றும் இளநீர் போன்ற பானங்களை அருந்தவும் பரிந்துரைக்கப்படுகின்றன.
தேநீர் மற்றும் காபி
தேநீர் மற்றும் காபி இரண்டிலும் காஃபின் நிரம்பியுள்ளது, இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது மற்றும் உடலியல் சார்புநிலையைத் தூண்டுகிறது. பலர் இந்த பானங்களில் உள்ள காஃபினுக்கு அடிமையாகிறார்கள், சிலர் காபி, டீ ஆகியவை செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களுக்கு உதவக்கூடும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், பலர் அறியாமலேயே செய்யும் மிகப்பெரிய உணவுத் தவறுகளில் காஃபின் ஒன்றாகும் என்றும், அவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டீ அல்லது காபி குடிப்பதை முழுமையாக கைவிடுமாறு ஐசிஎம்ஆர் வலியுறுத்தவில்லை என்றாலும் அவர்கள் உள்ளடக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கப் (150மிலி) காய்ச்சப்பட்ட காபியில் 80-120மிகி காஃபின் உள்ளது, இன்ஸ்டண்ட் காபியில் 50-65மிகி மற்றும் தேநீரில் 30-65மிகி காஃபின் உள்ளது. எனவே டீ, காபி நுகர்வு மிதமானதாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது, அதனால் காஃபின் உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 30 மி.மி என்ற அளவை தாண்டக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது