சர்வாதிகாரத்திற்கு எதிராக உத்தரபிரதேச மக்கள் கொட்டு வைத்துள்ளனர் - கார்த்தி சிதம்பரம்

By Velmurugan sFirst Published Jun 5, 2024, 10:34 PM IST
Highlights

உத்திரபிரதேசத்தில் ஜனநாயகம் தன்னுடைய பாணியில் சர்வாதிகாரிக்கு எப்படி தலையில்கொட்டுமோ, அதுபோல மக்கள் நறுக்கென்று கொட்டு வைத்திருப்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றிக்கு முதல் காரணம் முதல்வர்தான். அவரின் நலத்திட்டம், அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்கள் மதங்களை மதிக்கின்ற அரசு வேண்டும் என்பதற்காக, மதச்சார்பற்ற அரசு மத்தியில் வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள். எனது பகுதியை சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி சான்றிதழை தொடாதே; தனித்தொகுதி எம்எல்ஏ.வின் கையை தட்டிவிட்ட மாவட்ட செயலாளர்

உத்திரபிரதேசத்தில் ஜனநாயகம் தன்னுடைய பாணியில் சர்வாதிகாரிக்கு எப்படி தலையில் கொட்டுமோ, அதுபோல மக்கள் நறுக்கென்று கொட்டு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன்.

அதிமுக பெரிய அரசியல் கட்சி, அவர்களின் சின்னம் கிராமம் வரை உள்ளது. அவர்களுக்கு தொண்டர் இருக்கிறார்கள், அதை எந்த காலத்திலும் குறைத்து மதிப்பிட மாட்டேன். பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் அவர்களுடைய ஓட்டுகள் என்று சொல்ல முடியாது. சமுதாய ரீதியான அமைப்புகளோடு கூட்டணி வைத்திருந்தார்கள். அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே வேட்பாளர்களாக இருந்ததால் வாக்குகள் பெற்றது. இது முழுமையான வாக்குகள் என்று நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 

தேனி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்த ஜீப்; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

ஆனால் வாக்குகள் வாங்கி இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்கிறேன். அந்த வாக்குகள் அவர்களின் முழுமையான வாக்கு அல்ல. ஒரு சமுதாயத்தை சாராத வேட்பாளரை போட்டியிட வைத்திருந்தால் அந்த வாக்குகள் கிடைத்திருக்குமா இல்லையா என்பது கேள்விக்குறி. அதுபோல தான் அவர்கள் வைத்திருக்கும் அந்த அமைப்புகளின் கூட்டணி இல்லை என்றால் இந்த வாக்குகள் வந்திருக்காது என்றார்.

click me!