ஆபாச போட்டோசூட்; திருமணம் என்ற பெயரில் மனைவியை கணவனே விபசாரத்தில் தள்ளிய கொடூரம் - சேலத்தில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 8, 2024, 1:31 PM IST

சேலம் மாவட்டத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம் பெண்ணை கணவனே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் உடையபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 23). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது ஆடி மாதம் என்பதால் புதுமணப் பெண்ணை பெண் வீட்டார் ஆத்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பெண்ணின் செல்போனை உறவினர் ஒருவர் ஆய்வு செய்த போது அதில் ஆபாச புகைப்படங்கள், வீடியோகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Modi visits Wayanad : வயநாடு நிலச்சரிவு.! சம்பவ இடத்திற்கு நேரில் செல்லும் மோடி- நிவாரண உதவி அறிவிக்கப்படுமா?

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணிடம் உறவினர்கள் விசாரணை மேற்கொண்டதில் தனது கணவரான தமிழ்செல்வன் தன்னை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து அதனை இணையதளம் மூலமாக பிறருக்கு அனுப்பினர். பின்னர் அவர்களிடம் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இளம் பெண்ணின் குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணமகனை அழைத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

ஆனால், அதற்கு முன்பாகவே பாதிப்புக்குள்ளான இளம்பெண் தற்கொலை முயற்சியாக விஷம் அருந்தினார். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் இளம் பெண்ணிடம் புகாரை பெற்றுக் கொண்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டது சம்போ செந்தில் இல்லையா.! அப்போ இவர் தானா.?வெளியான ஷாக் தகவல்

இளம்பெண் அளித்த தகவலின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று தமிழ்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

click me!