கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, ஆடிப் பெருவிழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் மற்றும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், அரசு கருவூலம் இயங்காது.
Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?
அதே போன்று வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினமும் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் கல்வி நிலையங்கள் முழுவதுமாக செயல்படாது. மேலும் அரசு கருவூலங்கள் மிகக்குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். அன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.