Edappadi Palaniswami: உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவியா? பரபரப்பை கிளப்பிய பழனிசாமி

By Velmurugan s  |  First Published Jul 21, 2024, 8:02 PM IST

ஸ்டாலினின் மகனுக்கு துணைமுதல்வர் பதவி வழங்குவது ஏற்புடையதல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்டம் பாகல் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் 160 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக.வில் இணைந்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு முழுவதும் அம்மா உணவகம் வாயிலாக மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

சேலத்தில் நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணை கற்பழிக்க முயற்சி; பட்டப்பகலில் வெறிச்செயல்

இதனிடையே திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகம் முறையாக பராமரிக்கப்படாமல் அதன் செயல்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளன. அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவது கிடையாது. இதனால் அம்மா உணவகத்திற்கு வரும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. திமுக ஆட்சியில் சென்னையில் மட்டும் சுமார் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 2 தினங்களுக்கு முன் அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த ஆய்வை கடந்த 3 ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை? அம்மா உணவகங்கள் மீது அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏழை, எளிய மக்கள் தரமான, சுவையான உணவு கிடைக்காததால் ஏழை தொழிலாளர்கள் அரசின் மீது வெறுப்பில் உள்ளனர்.

தமிழகத்தை அதிரவைத்த பள்ளி மாணவன் கடத்தல் சம்பவம்; ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவு

துணைமுதல்வர் பதவி ஸ்டாலினின் மகளுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல. திமுக.வில் பல மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்களுக்கு துணைமுதல்வர் பதவி வழங்க ஏன் முன்வரக்கூடாது? திமுக அரசு தற்போது வரை 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. தமிழக அரசு கடனில் தான் செயல்பட்டு வருகிறது என்றார்.

click me!