சேலம் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கற்பழிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மன்னார்பாளையம், அன்னை சத்யா நகர் பகுதியில் கடந்த 15ம் தேதி பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போ அப்பெண்ணை பின் தொடர்ந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்த நபர் ஒருவர் சாலையில் யாரும் இல்லாததை அறிந்து திடீரென அப்பெண்ணை கட்டியணைத்து கீழே தள்ளினார்.
மேலும் அப்பெண்ணை சாலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்றிசியில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த வீடுகளைச் சேர்ந்த நபர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண்ணோ மயக்க நிலைக்கு சென்று சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திருப்பினார்.
undefined
தமிழகத்தை அதிரவைத்த பள்ளி மாணவன் கடத்தல் சம்பவம்; ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவு
இதனிடையே பெண்ணிடம் அத்துமீறிய நபர் உடனடியாக அங்கிருந்து மாயமானார். இதனைத் தொடர்ந்து அப்பெண் வீராணம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
Breaking: செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி; மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்
விசாரணையில், இச்செயலில் ஈடுபட்டது மன்னார்பாளையம் அடுத்த அல்லிகுட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது. உடனடியாக கண்ணனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கண்ணன் தொடர்பாக அவரது பக்கத்து வீட்டார் கூறுகையில், இவர் ஏற்கனவே இதே பகுதியில் உள்ள மூதாட்டி உள்பட சில பெண்களிடம் அத்துமீறியுள்ளார். மேலும் மது, கஞ்சா என தீவிர போதைக்கு அடிமையான கண்ணன் மனநலம் தொடர்பாகவும் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளாக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.