Armstrong : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டது சம்போ செந்தில் இல்லையா.! அப்போ இவர் தானா.?வெளியான ஷாக் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது சம்போ செந்தில் தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது என கூறப்பட்டு வந்தது. தற்போது போலீசாரின் பார்வை பிரபல தாதா நாகேந்திரன் மேல் திரும்பியுள்ளது.
Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்நிலையத்தில் ஆஜரான கூலிப்படையினர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் தொடர் விசாரணை காரணமாக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
Armstrong
பிரபல தாதா மகன் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பொண்ணை பாலு, அருள், ராமு மற்றும் ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வழக்கறிசர் அருளோடு காங்கிரஸ் நிர்வாகி அஸ்வந்தாமன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22ஆவதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வந்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபல தாதா நாகேந்திரனின் மகன்.
ஆமஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என்ன.?
இந்த நிலையில் அஸ்வத்தமன் தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனை அவரது வழக்கறிஞர்கள் நேற்றைய தினம் சந்தித்துள்ளனர். அப்போது அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்ட தகவலை கூறியுள்ளனர். இதனால் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கிற்கும் - அஸ்வந்தாமனுக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஸ்வந்தாமன் ஆம்ஸ்ட்ராங்கை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து தான் ஆம்ஸ்ட்ராஙை கொலை செய்ய அஸ்வந்தாமனின் தந்தை நாகேந்திரன் திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் சம்போ செந்தில் மூலம் கொலை நடைபெற்றதாக தெரிய வருகிறது.
நாகேந்திரனை சந்தித்தது யார்.?
இந்தநிலையில் சிறையில் இருக்கும் பிரபல தாதா நாகேந்திரனை தனி காவலர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. தற்போது நாகேந்தரின் ஆடியோ பதிவு மற்றும் அவர் கடந்த ஓராண்டாக எத்தனை நபர்களை சிறையில் சந்தித்தார். அவர் யாரிடம் எல்லாம் பேசினார். மருத்துவமனைக்கு செல்லும்போது யாரை சந்தித்தார் என அவருடன் இருக்கும் காவலர் வைத்திருக்கும் சிறப்பு ரெக்கார்டிங் டிவைஸ் மூலம் தற்பொழுது ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது யார்.?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு நேரடி தொடர்பு இருக்கும் என காவல்துறையினர் தங்களது விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், நாகேந்திரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் மூலம் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.