தோனி எப்போது ஓய்வு பெறுவார்..? உலகக்கோப்பையில் சொல்லியடித்த ஜோதிடர் கணிப்பு..!

By Thiraviaraj RM  |  First Published Jul 17, 2019, 11:41 AM IST

கர்நாடகாவில் எடியூரப்பா முதல் அமைச்சர் ஆக முடியாது என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார். 
 


கிரிக்கெட்டில் இருந்து டோனி எப்போது ஓய்வு பெறுவார் எனக் கணித்துள்ளார் பாலாஜி ஹாசன். 

’’உடனே தோனி ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. தோனியோட ஜாதகப்படி லக்கணாதிபதி தனுசு ராசியில் இருப்பார். அந்த தனுசு ராசியில் இருக்கிற கோச்சார குரு அக்டோபரில் பெயர்ச்சி ஆகிறார். குருபெயர்ச்சிக்கு பிறகு அவரது ஓய்வை அறிவிப்பார். அது நவம்பர், டிசம்பருக்கு அடுத்து தான் வரும். அப்போது ஓய்வை அறிவிப்பார். அல்லது உலகக்கோப்பை டி- 20 க்கு பிறகு அறிவிப்பார். இன்னைக்கோ, நாளைக்கோ அறிவிப்பார் என்பது அவர் ஜாதகப்படி இல்லை. 

Tap to resize

Latest Videos

ஆடி 31 க்கு பிறகு ஆவனி, புரட்டாசியில அறிவிப்பு வரும். கண்டிப்பா இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஸ்டாலின் ஜாதகத்தை நெட்டில் கண்டு பிடித்தேன். அவர் முதலமைச்சராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!