ஹெல்மட் போடாததால் பெண் எஸ்.ஐ உயிரிழப்பு... எடப்பாடியார் ஊரில் ஏற்பட்ட சோகம்..!

By vinoth kumar  |  First Published Jun 26, 2019, 12:18 PM IST

சேலத்தில் ஹெல்மட் போடாமல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு பெண் காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


சேலத்தில் ஹெல்மட் போடாமல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு பெண் காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன். இவரது மனைவி விஜயா (43). இவருக்கு விஷ்ணுப்பிரியா (23) என்ற மகளும், திருலோகசந்தர்(20) என்ற மகனும் உள்ளனர். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராக விஜயா பணிபுரிந்து வந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

 

இந்நிலையில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், இருசக்கர வாகனத்தில் முதலமைச்சரின் சொந்த ஊரான சிலுவம்பாளையம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், படுகாயமடைந்த விஜயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி விஜயா நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!