பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்... 5 பேர் அதிரடியாக வேறு சிறைக்கு மாற்றம்..!

By vinoth kumar  |  First Published Jun 22, 2019, 5:54 PM IST

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.


நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். 

பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

 

கடந்த மே 24-ம் தேதி பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக, குற்றவாளிகளை காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 17-ம் தேதியுடன் அவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், கடந்த 18-ம் தேதி காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகள் 5 பேருக்கு ஜூலை 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

click me!