கார் மீது லாரி மோதி விபத்து.... முன்னாள் தலைமைச்செயலாளர் மகன் படுகாயம்..!

Published : Jul 07, 2019, 05:53 PM ISTUpdated : Jul 07, 2019, 05:55 PM IST
கார் மீது லாரி மோதி விபத்து.... முன்னாள் தலைமைச்செயலாளர் மகன் படுகாயம்..!

சுருக்கம்

தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ் மகனின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது விவேக் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ் மகனின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது விவேக் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ராம மோகனராவ் பெயரை தமிழக மக்கள் எளிதில் மறக்க முடியாது. தமிழக அரசின் தலைமை செயலாளர்களிலேயே மிகப் பெரிய சர்ச்சைகள், பிரச்சனைகளில் சிக்கியவர். வரலாறு காணாத வகையில் தலைமைச் செயலகத்தில் உள்ள இவரது அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி தமிழகத்தின் மானம் கப்பலேறியது. இதில் முக்கியமானது சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான விவகாரங்களில் சிக்கிய பின்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்து அக்கட்சியின் அரசியல் ஆலோசகராகவும் ராம மோகன ராவ் இருந்து வருகிறார். 

இந்நிலையில், ராம மோகன்ராவின் மகன் விவேக் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், அருண் அன்பழகன் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்ட 4 பேர் காரில், பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, ஆத்துார் அருகில் உள்ள சம்பேரி என்னுமிடத்தில், சாலை வளைவில், டிப்பர் லாரி ஒன்று கார் மீது மோதியுள்ளது. இதில், காரிலிருந்த ராம மோகன்ராவின் மகன் விவேக் உள்ளிட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர்.

 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?