
சேலத்தில் பழைய பேட்டரி ஸ்கிராப் வியாபாரம் செய்துவரும் ராஜா என்பவர், கடந்த 10 வருடங்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் கமிஷன் அடிப்படையில் வியாபாரம் செய்து வருகிறார். ராஜா வெளியிலிருந்து பழைய பேட்டரிகளை வாங்கி, சிறிய லாபத்தில் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்த நேரத்தில் அவர் ஒரு மோசடி சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
ராஜாவுக்கு நன்கு அறிமுகமான வாடிக்கையாளர் சேர்த்தன் மூலமாக, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஜலீல் என்பவர் அறிமுகமானார். சரக்கு தேவைப்படுவதால், ஜலீல் தொடர்ச்சியாக தொகை கொடுக்கிறார் என நம்ப வைத்து, மொத்தமாக மூன்று தவணைகளில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள பேட்டரி சரக்குகளை அனுப்பச் செய்துள்ளார்.
மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
ஒவ்வொரு முறையும் பணம் குறித்து கேட்டபோது, “தங்களிடம் நம்பிக்கை இல்லையா?” என கூறி ஜலீல் ராஜாவை நம்ப வைத்துள்ளார். சரக்கு பெற்றும், ஆவணங்களை வழங்க மறுத்து, காலம் தாழ்த்தியிருக்கிறார். நான்காவது முறையாகவும் சரக்கு கேட்டபோது சந்தேகம் ஏற்பட்ட ராஜா, ஜலீலை குறித்து விசாரிக்கத் தொடங்கினார்.
வியாபார நெருக்கடி
விசாரணையில் ஜலீல் இதேபோல் பலரையும் ஏமாற்றி வருவது தெரியவந்தது. அவர் அதிகம் பேசுவதையும் தவிர்த்து, போனில் அழைப்புகளை துண்டித்ததும் ராஜாவின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. இந்த மோசடியில் அவர் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார்.
மொத்த மோசடி ரூ.10 கோடிக்கு மேல்?
வெளியே வாங்கிய சரக்குகளுக்கான பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு, ராஜா வியாபாரத்தில் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. சிலர் கூட சாமானை கொடுத்து பணம் திரும்பாததால் அவரிடம் நம்பிக்கை இழந்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மீது புகார்
ஜலீல் மீது தற்போது ராஜா முதலாவது புகாராளராக இருக்கிறார். இவரது மோசடி மோசடி வட்டாரம் ரூ.10 கோடியை தாண்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாக ரூ.85 லட்சம் ஏமாற்றம் செய்யப்பட்டதாக ராஜா புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோசடி புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜலீல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.