மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரிகலன் விபத்தில் இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பகிர்வுப்பிரிவான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் வழக்கம் போல ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது 50 அடி உயரத்திலிருந்து நிலக்கரி எரிகலனில் நிலக்கரி கொண்டு செல்லும் கண்டெய்னர் பெல்ட் கழன்று நிலக்கடி தொட்டி விழுந்தது. இதனால் புகையுடன் தீ விபத்து பிடித்தது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்? அரையாண்டு விடுமுறை ரத்தா? உண்மை என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஸ்ரீகாந்த் (24), மனோஜ்குமார்(22), சீனிவாசன்(42), முருகன்(25), கௌதம்(24) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை மையம் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!
மேலும் உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வேறு யாராவது சிக்கியுள்ளார்களாக என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.