கவுண்டம்பாளையம் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் ஆணவப்படுகொலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
வெட்கத்தில் சிவந்த சோபிதா..வாரி அணைக்கும் நாக சைதன்யா - வெளியான கியூட் எங்கேஜ்மெண்ட் பிக்ஸ்!
அப்போது அவர் கூறுகையில், நான் எனது படத்திற்கு சாதி பெயரை வைக்கவில்லை, கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்றத் தொகுதி. ஒரு ஊரின் பெயரை தான் எனது படத்திற்கு வைத்துள்ளேன். பார்ப்பவர்களின் கண்களில் தான் அனைத்தும் உள்ளது என்றார். அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ரீல் லைப் மட்டும் இல்ல; ரியல் லைப்லயும் விவசாயம்னா ரொம்ப பிடிக்கும் - நடவு பணியில் சசிகுமார்
இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆணவப்படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சிக்கிறார் என்றால் அவரையே தாக்க முற்படுகிறோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்துக் சென்றால் அவரிடம் சண்டையிட தயாராகிறோம். அப்படி இருக்கும் போது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான் என விளக்கம் அளித்தார்.