திடீரென நடுவழியில் பற்றி எரிந்த கார்… ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்லும் போது நேர்ந்த விபரீதம்!!

By Narendran S  |  First Published Apr 16, 2023, 9:23 PM IST

ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்லும் போது நடுவழியில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்லும் போது நடுவழியில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஊட்டி, கொடைக்காப்னல் போன்ற குளிரான பகுதிகளுக்கு செல்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி... சென்னை பேரணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!!

Latest Videos

அந்த வரிசையில் ஏற்காடும் ஒன்று. குளிர்ந்த பகுதியான ஏற்காட்டுக்கு நாமக்கல்லில் இருந்து கவினேஷ் என்பவர் தனது தாய் மற்றும் நண்பர்களோடு டஸ்டர் காரில் சென்று கொண்டிருந்தார். ஏற்காடு மலைப்பாதையில் 3வது கொண்டை ஊசி வளைவை கடந்து சென்று கொண்டிருந்த போது, காரில் இருந்து புகை வெளியே வந்துள்ளது.

இதையும் படிங்க: நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

இதனை கண்ட கவினேஷ் உடனடியாக காரை நிறுத்தி அதிலிருந்து தனது தாய் மற்றும் நண்பர்களை கீழே இறக்கிவிட்டார். அவர்கள் அனைவரும் காரில் இருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

A mid-suv car caught fire sometime ago on the Road while going up the hill. pic.twitter.com/2rg4HF4X20

— Omjasvin M D (@omjasvinTOI)
click me!