சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் பாண்டியராஜன், மணிகண்டன் உள்பட 4 மாணவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நீச்சல் தெரியாத 4 மாணவர்களும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடி கைது
மாணவர்கள் நீரில் மூழ்கி நீண்ட நேரமாவதால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் நீச்சல் தெரியாமல் காவிரி ஆற்றிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிப்பு