சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சாமியார் போன்று வந்த பெண் ஒருவர் திடீரென தரையில் அமர்ந்து அருள்வாக்கு கூறத் தொடங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான மக்கள் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்கள் கொடுக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். இந்த நிலையில் ஒரு பெண் நெத்தியில் பட்டையும், கழுத்தில் கருப்பு நிற மணியும் அணிந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் போர்டிகோவில் அமர்ந்து நான் சமயபுரத்து அம்மா எனக் கூறி என்னை பற்றி தெரிய வேண்டுமென்றால் ஜெயந்தி அம்மா அருள் வாக்கு டாட் காம் என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என கூறினார்.
எதற்காக இங்கு அமர்ந்துள்ளீர்கள் என கேட்டதற்கு, சும்மா பொழுது போகவில்லை வீட்டில் போரடிக்கிறது. அதனால் தான் வந்தேன் எனவும், ஈபி பில் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சப் பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் என சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தான் மனு கொடுக்க வந்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.
திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
அதற்காகத்தான் ஆட்சியரை பார்க்க வந்தேன். ஆனால் அவர் திங்கள்கிழமை ஆனால் வருவதில்லை எப்பொழுதாவது தான் அவர் வருவார் என்றார். தொடர்ந்து அங்கு இருந்த காவல் துறையினர் அவரை அப்புறப்படுத்த முயற்சித்த போது, செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து ஓம் சக்தி அண்ணாமலைக்கு அரோகரா என கூறி நான் அழகாக இருக்கிறேனா எனவும் சிரித்தபடியே கூறினார்.
எனக்கு அரசு வேலை வேண்டும்; மது போதையில் சாலையில் படுத்து பெண் அலப்பறை
உங்கள் ஊர் என்ன என்று கேட்டதற்கு அறநிலையத்துறை ஆணையாளர் பிச்சாண்டி மனைவியின் தங்கை என கூறிய அவர் தலைமைச் செயலாளர் இறையன்பு எனது அம்மாவின் தங்கச்சி பையன் என கூறியதோடு அவர் யார் பெயரும் போடாதீர்கள் இறைவன் பெயர் மட்டும் போதும் என தெரிவித்தார்.