சேலம் அருகே சொகுசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி

By Velmurugan s  |  First Published Apr 8, 2023, 2:34 PM IST

சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து தொப்பூர் நோக்கி லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. லாரியை சின்னப்பையன்  என்பவர் ஓட்டி வந்தார். அருகில் முத்துசாமி ஆறுமுகம் மற்றும் செந்தில் ஆகியோர் லாரியில் இருந்துள்ளனர்.


இந்த நிலையில் லாரி மேச்சேரியில் இருந்து தொப்பூர் பிரதான சாலையை கடக்கும்போது எதிரே வந்த சொகுசு பேருந்து ஒன்று லாரி மீது பலமாக மோதியது இதனால் லாரியை ஓட்டி வந்த சின்னப் பையன் என்ற ஓட்டுநரும் அருகில் படுத்து இருந்த முத்துசாமி என்ற ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அருகில் இருந்த ஆறுமுகம், செந்தில் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் நான்கு பேரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விரைந்து வந்த தொப்பூர் போக்குவரத்து  காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Latest Videos

திருவாரூர் மத்திய பல்கலை. மாணவிகள் மீது மதுபோதையில் இளைஞர்கள் தாக்குதல்

விபத்து சம்பவம் குறித்து  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் நேற்று நிகழ்ந்த இந்த சாலை விபத்து காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!