அச்சச்சோ.! திடீரென சரிந்த மேடை.. ஜஸ்ட் மிஸ்.!! எகிறி குதித்த அன்புமணி ராமதாஸ் - வைரல் வீடியோ

By Raghupati R  |  First Published Apr 5, 2023, 6:48 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற மேடை சரிந்து விழுந்தது.


பாமக தலைவராக   அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்.

அதன்படி இன்று சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும்  அப்பகுதியில் பாமக தொண்டர்கள் குவிந்திருந்தனர். சுமார் பிற்பகல் 3 மணி அளவில் பேருந்து நிலையத்திற்கு வந்த அன்புமணி,  பாமக கட்சி கொடியினை ஏற்றினார்.

Latest Videos

இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

பிறகு மேடை ஏறினார் அன்புமணி ராமதாஸ். மேடையில் கூட்டத்தினர் அனைவரும் இருந்ததால், திடீரென மேடை சரிந்து விழுந்தது. அன்புமணி ராமதாஸ் மேடையில் இருந்து தாவி கீழே குதித்தார். இதில் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அவர் காயம் இன்றி அவர் உயிர் தப்பினார்.   இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.   பின்னர் சிறிய அளவு டேபிள் கொண்டுவரப்பட்டு அதில் ஏறி நின்று அன்புமணி பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாமக கொடியேற்று விழாவில் திடீரென சரிந்த மேடை - காயமின்றி தப்பினார் அன்புமணி ராமதாஸ்.
இடம்: வாழப்பாடி, சேலம். pic.twitter.com/aLQLAbJijM

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

click me!