திடீரென சரிந்து விழுந்த மேடை; சட்டென எகிறி குதித்து உயிர் தப்பிய அன்புமணி

By Velmurugan s  |  First Published Apr 5, 2023, 11:03 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேச வந்த மேடை சரிந்து விழுந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


பாட்டாளி மக்கள் கட்சி சேலம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் கொடியேற்று விழா நடப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார் என்றும் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் கொடியேற்றி விட்டு அருகில் இருந்த மேடையில் பேசுவதற்காக ஏறினார். அப்போது அன்புமணி ராமதாஸுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Latest Videos

அப்போது அதிக அளவில் தொண்டர்கள் மேடை மீது ஏறி  அவருக்கு சால்வை அணிவிக்க முற்பட்டனர். இதனால் பாரம் தாங்காமல் மேடை திடீரென சரிந்து விழுந்தது. மேடை விழுவதை உணர்ந்த அன்புமணி ராமதாஸ் சற்றும் தாமதிக்காமல் முன்புறமாக எதிரி குதித்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

5 நிமிடங்களில் சகஜ நிலைக்கு திரும்பிய அன்புமணி ராமதாஸ் டேபிள் மீது ஏறி பேச தொடங்கினார். அன்புமணி ராமதாஸ் பேச வந்த மேடை சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!